Print this page

ஓர் சம்பாஷணை எதார்த்தவாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது. குடி அரசு - உரையாடல் - 05.04.1931 

Rate this item
(0 votes)

எதார்த்தவாதி ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது. 

போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது. 

எதா சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள் தானே? 

போதகர் இல்லை சார், எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படு கிறவர்கள்தான். 

எதா நல்லது. அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே? 

போத ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட் சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்த தாகக் குறை கூறுவார்கள். 

எதா = அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக் கலாம். 

போத : அப்படியானால் ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன? 

எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசி தானே? 

போத :ஆம் வாஸ்தவந்தான். ஆதியாகமம் 2-ம் அதிகாரம் 7ம் வசனத் தில் (கடவுளே) தேவனே.. அவன் ஒரு தீர்க்கதரிசி.., என்பதாய்ச் சொல்லி யிருக்கிறார். 

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்..... பொருள்படப் 

பேசியதைத் தாங்கள் வாசித்ததுண்டா? 

போத அஆஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு. 

எதா மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா? 

போத : சார் அது பழைய ஏர்ப்பாட்டில் உள்ளது. புதிய ஏர்ட்டாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். 

தா : சரி ஐயா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் டையின் எழுதப்பட்டது. 

போத தெய்வமில்லாத காலமிது என்பதாய் முனு முனுத்துக் கொண்டு நழுவி விடுகிறார் . 

எதா : பைபிள் காலத்தில் தெய்வப்பயமில்லாத இடமிருந்தது. இப் பொழுது காலம் வந்துவிட்டது என்பது உங்கள் அநுபவம். ஆனால் எங்க ளுக்குத் தெய்வ கவலை யில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு. 

குடி அரசு - உரையாடல் - 05.04.1931

 
Read 90 times